தீபாவளி பண்டிகை குறித்த சர்ச்சை… திமுகவின் விமர்சனப் போக்கு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
திராவிடக் கட்சியாக அறியப்படும் திமுக இந்து பண்டிகைகள் குறித்து எப்போதும் விமர்சித்தே வருகிறது. அந்த வகையில் தீபவாளி பண்டிகை குறித்தும் அதன் கொண்டாட்டங்கள் குறித்தும் தற்போது அக்கட்சியின் சில மூத்தப் பேச்சாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு உள்ளனர். அந்தக் கருத்துகள் தமிழகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தீபாவளி அவசியமா என்பது பற்றி தீபவாளி சித்தாந்தமும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் பேச்சாளர் சுப.வீரபாண்டியன் வெளியிட்ட வீடியோ தற்போது பொதுவெளியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளித் திருநாள் என்பது தமிழர்கள் பண்டிகை அல்ல… இது சமணர்கள் கொண்டாடிய பண்டிகை. இந்த பண்டிகையை இந்துக்கள் பண்டிகையாக மாற்றிக் கொண்டார்கள்.
இது சமணர்களின் ஸ்ரீபுராணம் நூலில் குறிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் அதாவது பனிக்காலம் தொடங்கி இதைக் கொண்டாடும் விதமாகவே தீபவாளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை அழிக்கப்பட்ட நாள் தான் தீபவாளி என்பதற்கான எந்த குறிப்பும் எந்த நூலிலும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். சமணம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கம் இந்து மதத்தில் அதிகரித்து உள்ளது என்பது போல அவர் பேசினார். இந்த வீடியோவை டாக்டர் சுமர்ந்த் ராமன் என்பவர் தனது கண்டனத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும் எம்பியுமான ஆ.ராசா தீபாவளி பண்டிகை குறித்து, அறிவியலுக்கு எதிராக இருக்கிற காரணத்தினால் பகுத்தறிவிற்கு ஒவ்வாத காரணத்தினால் நான் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து செல்வதில்லை எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்தக் கருத்தும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout