தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரரின் தங்கை… வைரல் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் தீபக் சாஹரின் தங்கை மால்தி சாஹர் தற்போது நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்னும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சிஎஸ்கேவை பொறுத்தவரை தீபக் சாஹர் முக்கிய வீரராக இருந்துவருகிறார். இவருடைய தம்பி ராகுல் சாஹர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களின் சகோதரி மால்தி சாஹர் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் பார்வையாளராக கலந்துகொள்வார். இதனால் கேமராவில் இவருடைய முகம் அடிக்கடி பதிவாவது வழக்கம்.
அந்த வகையில் ரசிகர்களிடையே பிரபலமான மால்தி சாஹர் சிஎஸ்கேவின் விசிறி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் மால்தி சாஹருக்கு எனத் தனியொரு ரசிகர் பட்டாளமே கூடிவிடும். இப்படி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற மால்தி தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் உருவாக்கும் WalkingTalkingStrawberryIcecream எனும் புதிய படத்தில் மால்தி சாஹர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கருத்து பகிர்ந்து கொண்ட மால்தி, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் படத்தில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரவுடி பிக்சர் வெளியீட்டில் திரைக்குவந்த “கூழாங்கல்“ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஏகப்பட்ட வெளிநாட்டு விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது. இதைத்தவிர “ராக்கி” எனும் திரைப்படத்தையும் இவர்கள் வெளியிட உள்ளனர். தற்போது “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படம் உருவாகி வரும் சூழலில் “WalkingTalkingStrawberryIcecream“ திரைப்படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com