மைதானத்திலேயே காதலியை கரம் பிடித்த தீபக் சஹார்: வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Thursday,October 07 2021]
இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் சென்னை அணி படு தோல்வி அடைந்தாலும் தீபக் சஹார் தனது வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார். ஆம் இன்று அவர் போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே தனது காதலியை புரபோஸ் செய்துள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆட்டக்காரரான தீபக் சஹர் இன்று போட்டி முடிந்த பிறகு தனது காதலியை மைதானத்திலேயே சந்தித்தார். அதனை அடுத்து திடீரென அவர் எதிர்பாராத வகையில் மோதிரத்தை மாட்டி அவரிடம் புரபோஸ் செய்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத அவரது காதலி திகைத்து நின்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இருப்பினும் தீபக்சஹாரின் காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டி அணைத்துக் கொண்டார்.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னை அணி தோல்வி அடைந்தாலும் தீபக் சஹர் ஆட்டநாயகன் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Deepak Chahar proposed his girlfriend ??❤️
— Ash MSDian™ ???? (@savagehearttt) October 7, 2021
What a moment ??#Deepakchahar || #CSK || #CSKvsPBKSpic.twitter.com/uPli45GoLB