ஜெயலலிதாவின் நிஜப்பெயர் கோமளவல்லியா? தீபா விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் வரலட்சுமியின் கேரக்டரான கோமளவல்லி என்ற கேரக்டர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த பெயர் படத்தில் மியூட் செய்யப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், அரசியல் அமைப்பு ஒன்றின் தலைவியுமான ஜெ.தீபா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தீபா கூறியதாவது: ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் ஜெயலலிதாவை அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள்' என்று கூறினார்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவல்லி இல்லை என்றும், அவர் நடிகையாக இருந்தபோது கோமளவல்லி என்ற கேரக்டரில் கூட நடிக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.