எச்.ராஜாவிற்கு இதைவிட வேறு அவமானம் தேவையா?. நெட்டிசன்கள் கிண்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை தனது முகநூலில் பெரியார் சிலையை அகற்றுவது குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்து கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார். அவரது கட்சியினர்களே அவர் மீது அதிருப்தி அடைந்த நிலையில் வேறு வழியின்று எச்.ராஜா தனது பதிவை நீக்கிவிட்டார்
இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்காத அரசியல் தலைவர்களே இல்லை என்று கூறலாம். வைகோ, சுப வீரபாண்டியன் ஆகியோர்கள் எச்.ராஜாவை எச்சரிக்கை வகையில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவ்வப்போது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தன் பங்குக்கு எச்.ராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா ? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர்...சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை..இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன்.. என்று கூறியுள்ளார்.
தீபாவின் இந்த பதிவு குறித்து சமூக வலைத்தள பயனாளி ஒருவர் கூறியபோது, 'இதைத்தான் எங்கள் அண்ணன் எச்.ராஜாவுக்கு நிகழ்ந்த உச்சகட்ட அவமானமாக பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார். எச்.ராஜாவுக்கு இது தேவையா? என்று நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com