அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார் தீபா
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மெடிக்கல் சீட் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மறைவு தமிழத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. அவருடைய குடும்பத்தினர்களுக்கு அரசியல் தலைவர்களும், விஜய் உள்பட பல திரையுலக பிரமுகர்களும் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் அளித்தனர்.
இந்த நிலையில் நாளை அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரியலூர் செல்லவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து தீபா அணியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல தீபா நாளை அரியலூர் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபா, அவர் கணவர் மாதவன் இருவரும் சேர்ந்து, அனிதா வீட்டுக்குச் செல்கின்றனர். நிதியுதவியும் அளிக்கப்படவுள்ளது" என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com