நாடாளுமன்ற தேர்தல்: ஜெ.தீபா அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்து போட்டியிடவும் வியூகம் அமைத்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று தேர்தலை சந்திக்க தயாராகியுள்ள நிலையில் தற்போது தீபா கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கட்சியான எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'வரும் 18.04.2019 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஜெ.தீபா அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ள கழக உடன்பிறப்புகள், வரும் 16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.
தீபாவின் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பங்கள் பெற அக்கட்சியின் தொண்டர்கள் குவிய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக-திமுக ஆகிய இரு அணிகளின் வேட்பாளர்களுக்கும் இக்கட்சியின் வேட்பாளர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments