தீபா ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய தேர்தல் ஆணையம்
- IndiaGlitz, [Thursday,November 23 2017]
அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி, சசிகலா-தினகரன் அணி, தீபா அணி என மூன்று அணிகள் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து இன்று தீர்ப்பு அளித்தது. இன்றைய தீர்ப்பில் இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தெளிவாக கூறியுள்ளது.
இந்த நிலையில் இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தீபா தரப்பு வாதாடியுள்ள நிலையில் தீபா குறித்த ஒரு தகவலை தேர்தல் ஆணையம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. அதாவது தீபா, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்பதுதான் அந்த தகவல். ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல் அக்கட்சியின் சின்னத்திற்கே உரிமை கொண்டாடியுள்ளார் தீபா என்பதை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தீபா தரப்பினர் சுமார் 20,000 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.