அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாதவன் சென்றது ஏன்? தீபா அதிர்ச்சி
- IndiaGlitz, [Friday,March 23 2018]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா ஒரு கட்சியையும், அவரது கணவர் மாதவன் ஒரு கட்சியையும் தொடங்கியுள்ளனர். இருவருமே அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தீபாவின் கணவர் மாதவன் இன்று திடீரென சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்றதாக தெரிகிறது. ஆனால் அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி இல்லாததால் அவர் திரும்பிவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாதவன், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால், முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றேன். அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் இல்லை. இதனால், அவரைப் பிறகு சந்திப்பேன் என்றவரிடம் முதல்வரைச் சந்திப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, பிறகு விரிவாகப் பேசுகிறேன்
முதல்வரை தீபாவின் கணவர் எதற்காக சந்திக்க சென்றார் என்பது குறித்து தீபாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.