கட்சியை விட்டு நீக்கிய கார் டிரைவருக்காக தர்ணா செய்த தீபா

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த ஆண்டு எம்ஜிஆர் அம்மா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியில் அவருடைய கணவர் மாதவனுக்கு இருந்த மரியாதையைவிட அவரது கார் டிரைவரான ராஜாவுக்கு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடும் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் டிரைவர் ராஜாவை திடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தீபா அதிரடியாக நீக்கினார். இந்த நீக்கத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று அந்த கட்சியின் தொண்டர்களுக்கே புரியாத புதிராக இருந்தது

இந்த நிலையில் மாம்பலம் போலீசார் ராஜாவை திடீரென கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் ஒருவர் தன்னை ராஜா தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ராஜாவை கைது செய்த போலீசாரிடம் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை விடுவிக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்காக அந்த கட்சியை தோற்றுவித்தவரே தர்ணா போராட்டம் செய்து வருவதை அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

More News

ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் பணிபுரியும் ஸ்டண்ட் சில்வா

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கின்றது. 2.0, விஸ்வரூபம் 2 முதல் மாரி 2 வரை சுமார் பத்து இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

வேலைக்காரனை சந்தித்த வேலாயுதம் - காரணம் என்ன ?

கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்'. இந்த படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன், மோகன்ராஜா ஆகியோர்களின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

ரூ.100 கோடி மதிப்பில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது.

நடிகை தேவயானிக்கு ஏற்பட்ட மிகப்பேரிய இழப்பு

பிரபல நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 73.

25 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சி

1992ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதே வருடத்தில் அவர் இசையமைத்த இன்னொரு படம் 'யோதா' என்ற மலையாள படம்.