தீபா அக்கா : கண்ணுமுன்னாடி அம்மா உயிர் போனது ! யாரும் அறியாத தீபாவின் மறுபக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி சீசன் இரண்டில்(Cook with Comali Season 2) பங்கு பெற்ற தீபா அக்கா பலரை அந்த நிகழ்ச்சியின் மூலம் சிரிக்க வைத்துள்ளார். அவரது இயல்பான பேச்சும், சிரிப்பும் மக்களை கவர்ந்தது. ஆனால் இந்த சிரிப்புக்கு பின்னால் பல வருட துயரங்களும், முயற்சிகளும் இருப்பது தெரியுமா?
இவர் தனக்கு நடிப்பின் மீதும், நடனத்தின் மீதும் ஆர்வம் இருந்ததை கண்டு கொண்டு அதையே தொழிலாக செய்ய நினைத்தார். எனவே, வீட்டில் தனக்காக மாப்பிள்ளை பார்க்கும்போது தனது நடிப்புத் தொழிலை ஏற்றுக் கொள்ளும் ஒரு கணவரை அவர் எதிர்பார்த்தார் என்பதால் பலர் அவரை நிராகரித்துள்ளனர். பிறகு ஷங்கர் என்பவர் தான் அதற்கு ஒப்புக்கொண்டு அவரை திருமணம் செய்துள்ளார்.
இதனிடையே இந்தியாக்ளிட்ஸ் எடுத்த பிரத்யேக பேட்டியில் தன்னுடைய தாயின் மறைவு குறித்து பேசி கலங்கினார் தீபா, மேலும் டிஜிட்டலில் முதன்முதலில் பேட்டியளித்த தீபாவின் தந்தை மற்றும் அவரது தங்கை, எங்க வீட்டு பெண்ணின் வளர்ச்சியால் நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றுவிட்டோம் என்றும், தீபாவை நடனம், நாடகம் போன்றவற்றிக்கு சிறுவயதில் அழைத்துச்செல்ல உத்துழைக்கவில்லை என்று சொல்லி கண் கலங்கினார் தீபாவின் தந்தை. மேலும் தீபாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கி பார்க்கவேண்டு என்று நினைத்தது என் மனைவிதான், ஆனால் இன்று அவள் எங்களுடன் இல்லை என்று கூறி கலங்கி பேசினார் தீபாவின் தந்தை.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments