பிரியவே கூடாது… கைகளுக்கு சிறை விலங்கிட்டு காதலித்த ஜோடி… 123 நாட்களில் நடந்த சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதல் எனும் உணர்வுக்கு உலகம் முழுவதும் பெரிய மதிப்பு கொடுக்கப் படுகிறது. இப்படியான சரித்திரத்தில் நாமும் இடம்பிடித்து விட வேண்டும் என நினைத்த ஒரு காதல் ஜோடி பிரியவே கூடாது என முடிவெடுத்து இருக்கின்றனர். இதனால் வேறு யாரும் நம்மை பிரித்துவிடக் கூடாது என்றும் ஏன், நம்மால் கூட நம்மைப் பிரிக்க முடியாமல் இருக்க வேண்டும் என தீர்மானித்து இருக்கின்றனர்.
எனவே அந்தக் காதல் ஜோடி, காவலர்கள் பயன்படுத்தும் சிறை விலங்கை கைகளில் போட்டுக் கொண்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து, இணைபிரியாமல் வாழ்க்கை நடத்தத் துவங்கி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். உக்ரேனைச் சேர்ந்த கார் விற்பனையாளர் அலெக்ஸாண்டர் குட்லே. ஒப்பனைக் கலைஞர் விக்டோரியா புஸ்டோவிடாவா. இருவரும் தீராதக் காதல் வலையில் விழுந்துள்ளனர்.
இதையடுத்து பிரியாமல் வாழவேண்டும் என முடிவெடுத்த இந்த ஜோடி, அலெக்ஸாண்டர் தனது வலது கையிலும் விக்டோரியா தனது இடது கையிலும் என இருவரும் ஒன்றாகச் சேர்ந்தது சிறை காப்பை போட்டுக் கொண்டு வாழத் துவங்கியுள்ளனர். இதனால் ஒரு ஷு லேஸை கட்டுவதாக இருந்தாலும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் அதைச் செய்தாக வேண்டும். இப்படி இருவரும் ஒன்றாக வெளியே போவது, அன்றாட வேலைகளைச் செய்து கொள்வது என வாழ்க்கை நகர்ந்து இருக்கிறது.
ஆனால் அலெக்சாண்டர்- விக்டோரியா வாழ்க்கை வெறும் 123 நாட்களில் கசந்து போய் இருக்கிறது. இதனால் கை விலங்கை உடைத்து விட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விக்டோரியா 24 மணி நேரமும் ஒன்றாக இருப்பதால் அவருக்கு என்மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது. மிஸ் யூ என்ற வார்த்தையை அவர் சொல்லவே இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.
இதேபோல அலெக்சாண்டர் இருவரின் விருப்பு வெறுப்புகளும் ஒரே மாதிரியாக இல்லை. ஒரே அலைவரிசையில் இல்லாததால் இருவரும் பிரிகிறோம் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மேலும் இந்தக் காதல் ஏன் கசந்துவிட்டது என்பது குறித்து தற்போது நெட்டிசன்கள் விவாதிக்க துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com