ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்!

  • IndiaGlitz, [Thursday,October 08 2020]

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ’ஐங்கரன்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ’அடங்காதே’ ’ஜெயில்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் மற்ற படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை அகிலன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இந்த படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ். ராஜதுரை ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில், ஸ்டண்ட் மணியின் ஸ்டன்ட் இயக்கத்தில் தாமு கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை நவீரா சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தொடர்ந்து 13 ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர்!!! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தியாவின் முதல் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்

ஒரு நாள் முதல்வர் பாணியில்… ஒரு நாள் அதிபர்…. உண்மைச் சம்பவம்!!!

பின்லாந்து அதிபராக 16 வயது சிறுமி ஆவா முர்டே இன்று பதவியில் அமர்ந்து இருக்கிறார். இச்சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால்… 3 காவலர்கள் பணியிடை மாற்றமா???

சமீபத்தில் கடலூரில் இருந்து 3 காவலர்கள் கள்ளக்குறிச்சிக்கு பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

ரத்தக்காடாக மாறிவரும் ஐடி நகரம்… பழிக்குப் பழி… கொலைச் சம்பவங்கள்…

நாட்டிலேயே பழிக்குப் பழி வாங்குவதற்காக ரத்தக்களரியில் ஈடுபடும் நகரங்களின் வரிசையில் பெங்களூர் முதல் இடத்தைப் பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அனிதாவுக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள்: சுரேஷ் தந்திரம் பலித்துவிட்டதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக அனிதா சுரேஷ் சக்கரவர்த்தி பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது. செய்தி வாசிப்பவர்கள் முன் நான் நிற்க மாட்டேன்,