அடித்து நவுத்தும் பேய்மழை!!! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்!!! நிலச்சரிவு சம்பவங்கள்!!!

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாகவும் பல இந்திய மாநிலங்கள் தற்போது வெள்ளத்தில் மிதக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவின் இடுக்கி, பத்தனம் திட்டா, வயநாடு போன்ற மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுமுதல் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மூணாறு பகுதியில் உள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டி மாடா பகுதியில் ஒரு தனியார் எஸ்டேட்டில் வேலைப் பார்ப்பதற்காக 80 தொழிலாளர்கள் தற்காலிக குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்களின் நிலைமை தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்காலிக குடியிருப்பு பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் செல்லமுடியாத அளவிற்கு அப்பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றுகாலை அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மற்ற 70 பேரின் நிலைமை குறித்து தற்போது மீட்புக்குழுவினர் கடும் அச்சம் தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பகுதி முழுவதும் மீட்புக்குழுவே செல்ல முடியாத அளவிற்கு கனமழையால் ஒட்டுமொத்த நிலமும் வெள்ளக்கடாகக் காட்சி அளிப்பதாகவும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதகாவும் கூறப்படுகிறது. இதைத்தவிர கேரளாவின் கோட்டயம் பகுதியில் பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டு கரை புரண்டு ஓடத் தொடங்கியிருக்கிறது. இந்த வெள்ளத்தில் பல மாடுகள் அடித்துச் செல்லப்படுவது போல ஒரு வீடியோ காட்சியும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.