ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து… உயிரிழப்பு 100 ஐ தொட்ட அவலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய ஆப்பிரிக்கா நாடான ஈக்வடார் நாட்டின் தலைநகர் கினியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 98 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் 615 பேர் கவலை கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கினியாவில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த டைனமைட் எனும் வெடிபொருள் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு திடீரென வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வெடிபொருள் வீரியம் மிக்கவை என்பதால் தொடர்ந்து சரமாரியாக வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதனால் ஆயுதக் கிடங்கை சுற்றி உள்ள இராணுவத் தளம் முழுவதும் சேதம் அடைந்து பொதுமக்களும் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்து உள்ளனர்.
இதுகுறித்து முதலில் தகவல் வெளியிட்ட அந்நாட்டு சுகாதாரத்துறை 20 பேர் உயிழந்து விட்டதாகக் கூறி இருந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி 98 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மேலும் 615 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து அந்நகரின் முக்கால் வாசி பகுதி அழிந்து போனது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 200 ஐ தாண்டியது. இந்நிலையில் கினியாவில் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதோடு பாதுகாப்பு அடிப்படைகளை கவனிக்கத் தவறியதால்தான் இந்த வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் டியோடோரா ஓபியாங் தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments