பாதிப்பு குறைவு....! ஆனால் உயிரிழப்பு அதிகம்...பதறும் கொங்கு மண்டலம்......!
- IndiaGlitz, [Friday,June 04 2021]
கோவையில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.
கொங்கு மண்டலமான கோவையில், கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது, இதனால் பெரும்பாலான மக்கள் பயத்தில் உள்ளனர். இன்று மட்டும் சுமார் 2890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,898 -ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 4,546 பேர், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,999 பேர் ஆகும்.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவிற்கு பாதிப்படைந்து, 48 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,394-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தால், அவர்களின் இறப்பிற்கும் வேறு பிற காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.