சினிமா- ல துணை இயக்குனரா இருக்கறதுக்கு ,நான் ஏன் உங்க கூட படுக்கணும் ?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான காடுவெட்டி திரைப்படத்தின் துணை இயக்குநர் கெளசல்யா அவர்கள், அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்
கூறியதாவது,
நான் காடுவெட்டி திரைப்படம் பார்த்தேன். எனக்கு நான் நினைத்தப்படி வீடியோ வெளி வந்துள்ளது.முன்பு பகாசூரன் படத்தில் வேலை செய்யும் போது,காடுவெட்டி திரைப்படத்தில் நடிப்பிற்காக என்னை தொடர்பு கொண்டார்கள்.
அப்போது துணை இயக்குநர் பற்றாக்குறை என கூறினர்.எனவே அந்த படத்தில் துணை இயக்குநர் மற்றும் ஒரு தனி கதாப்பாத்திரம் இரண்டும் செய்து கொடுத்தேன். படப்பிடிப்பு களம் கிராமத்தில் என்பதால் எனக்கும் மிகவும் வசதியாக இருந்தது.இதுவரை நான் மொத்தமாக ஒரு ஏழு திரைப்படத்தில் வேலை செய்து இருப்பேன். இளைஞர்களின் காதலை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தோலுரிக்கும் திரைப்படம் தான் இந்த காடுவெட்டி.இதில் எந்த சாதியையும் ஏற்றியோ இறக்கியோ காட்டவில்லை.
சாதி ரீதியான விமர்சனங்கள் மக்களிடம் இருந்து வரத்தான் செய்கிறது.நான் துணை இயக்குநராக எனது வேலையை சிறப்பாக செய்ய நினைக்கிறேன் .அதை தாண்டி எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமும் இல்லை.இயக்குநர் மோகன்ஜி அவர்களிடம் வேலை செய்வதை குறித்த எதிரான கருத்துக்கள் எனது நடுத்தரமான நண்பர்களிடம் இருந்து வரும்.இந்த இயக்குநரிடம் வேலை செய்தால் உனக்கு தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்க மாட்டார்கள் என பல கருத்துக்கள் என்மீது திணிக்கப்பட்டன.
ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.எனக்கு சினிமா என்றால் என்ன என்பதை விளக்கிய குரு தான் இயக்குநர் மோகன்ஜி.சினிமாவுக்குள் நுழைவதற்கே நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். எனக்கான இடத்தை கொடுத்தது மோகன்ஜி அண்ணா.எனவே இந்த மாதிரியான பேச்சுக்களை நான் கண்டு கொள்ள மாட்டேன் .
ஆரம்பத்தில் நான் சினிமாவிற்குள் வருவதற்காக அதிகமான முயற்சி எடுத்த காலக்கட்டத்தில்,பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.நிறைய நிராகரிப்புகளை சந்தித்தேன்.பிறகு ஒரு சேனலில் வேலைக்கு சேர்ந்தேன்.அங்கு நிறைய இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை நேர்க்காணல் செய்யும் பொழுது அவர்களுடைய தொலைபேசி எண்களை வைத்து வாய்ப்புகள் தர சொல்லி கேட்டேன்.
நிறைய இடங்களில் வாய்ப்புக்காக கெஞ்சி கெஞ்சி ஓடிக்கொண்டே இருக்கும் போது, ஒரு நாள் நேர்காணலுக்காக சேனலிற்கு வந்த மோகன்ஜி அண்ணாவிடம்,உங்களுடைய அடுத்த திரைப்படத்தில்,உங்களுக்கு துணை இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு தர சொல்லி கேட்டேன்.அதற்கெல்லாம் பிறகு வந்தது தான் இந்த காடுவெட்டி திரைப்படம்.மேலும் சினிமாவை சினிமாவாக மட்டும் தான் பார்க்க வேண்டும் நடுத்தரமான திரைப்படத்தை எடுக்க வேண்டும் என கற்று கொண்டேன்.
காடுவெட்டி திரைப்படம் கூட அரசியல் சார்ந்தது என ஒரு பகுதி பார்வையாளர்கள் முடிவே செய்து இருப்பர்.அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல வருவது என்னவென்றால் ,ஒரு படத்தை முழுமையாக பார்த்து உள்வாங்கி சிந்தித்து பார்த்தால் மட்டுமே அதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியும்.இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் படமெல்லாம் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.நான் நிறைய சஸ்பென்ஸ் திரைப்படம் எடுக்க விரும்புகிறேன்.
பிறகு நான் சினிமாவில் சில சீண்டல்களையும் தாண்டி தான் வந்தேன்.குடும்பம் ,நட்பு எல்லாவற்றையும் தூக்கி எறிந்து சினிமா தான் எல்லாமே என வந்து விட்டோம் .
எதனையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.ஏழை பணக்கார பாகுபாடு இல்லாமல் சமத்துவம் சகோதரத்துவம் நிறைந்த இருக்க வேண்டும்.இங்கு யாருக்கும் கும்புடு போடக் கூடிய நிலைமை இருக்கக் கூடாது.என தன்னுடைய இயக்குநர் பயணத்தை கலைநயத்துடன் விளக்கிய துணை இயக்குநர் கெளசல்யா அவர்களின் முழு தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com