ரிலீஸ் ஆன விஜய் தேவரகொண்டா படத்தில் திடீர் மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் தேவரகொண்டா, மந்தனா ராஷ்மிகா நடிப்பில் உருவான 'டியர் காமிரேட்' என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிய இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்ததால் நல்ல ஓப்பனிங் வசூல் கிடைத்தது. ஆனால் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் கொடுத்த கலவையான விமர்சனங்கள் காரணமாக இந்த படத்தின் குழுவினர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
'டியர் காம்ரேட்' படத்தை விமர்சனம் செய்த பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய குறை என்னவெனில் இந்த படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருப்பது என்பது தான். அதனால் படத்தை கொஞ்சம் டிரிம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் அதிரடியாக இந்த படத்தில் உள்ள 14 நிமிடங்கள் காட்சியை கட் செய்துள்ளனர்.
குறிப்பாக புகழ்பெற்ற கேன்டீன் பாடல் நீக்கப்பட்டுள்ளதாகவும், கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒருசில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே 170 நிமிடங்கள் ரன்னிங் டைம் உள்ள இந்த படம் தற்போது 14 நிமிடங்கள் குறைந்துவிட்டதால் 156 நிமிடங்கள் படமாக இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது. படக்குழுவினர்களின் இந்த அதிரடி முடிவை அடுத்து இந்தப் படம் ரசிகர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout