கொரோனாவுக்கு இடையில் தீவிரமாகும் விசித்திர நோய்? பீதியை கிளப்பும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் வாய் வழியாக சென்று மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருவதாகப் பரபரப்பு கிளம்பியது. ஃப்ளோரிடா மாகாணத்தில் இப்புதிய தொற்று நோயால் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. பூங்காவிற்குச் சென்று திரும்பியவுடன் அவர் உயிரிழந்த நிலையில் யாரும் நீச்சல் குளத்திற்கோ அல்லது நன்னீர் உள்ள இடங்களுக்கோ பாதுகாப்பு இல்லாமல் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) பிரச்சாரம் செய்து வந்தது.
அமெரிக்காவின் பல வடக்கு மாகாணங்களில் காணப்பட்ட இத்தொற்று நோய் தற்போது தெற்கு மாகாணங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அந்நாட்டின் சிடிசி அச்சம் தெரிவித்து உள்ளது. நன்னீரில் வாழும் ஒரு உயிரணு கொண்ட அமீபா தான் இத்தொற்று நோய்க்கு காரணம் என்றம் கூறப்படுகிறது. இந்த வகை அமீபாவிற்கு நெக்லுரியா ஃபோலெரி என விஞ்ஞானிகள் பெயரிட்டு உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 1962 ஆம் ஆண்டில் இருந்தே இத்தொற்று நோய் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பாதிப்பினால் இதுவரை 37 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் மனசோட், கன்சாஸ், இந்தியானா போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்திய இப்புதிய தொற்று நோய் தற்போது அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களிலும் பரவி வருவதாக அச்சம் எழுந்துள்ளது. மேலும் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு குறைந்தது ஒரு வாரத்தில் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீச்சல் குளங்களுக்கு செல்வோர் அங்குள்ள நீரை அருந்துவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் குளோரின் குறைந்த நன்னீரில் உள்ள நெக்லுரியா ஃபோலெரி எனும் அமீபாவை முழுங்கும்போது அந்த அமீபா வாய் வழியாகச் சென்று மூளையை தின்று விடுவதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். இதுபோன்ற பாதிப்பினால் 1-9 நாட்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, கழுத்து இறுக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும் எனவும் இறுதியில் கோமாவிற்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்நோயின் ஆரம்பித்திலேயே கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கூறிவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout