பிஃஎப் அக்கவுண்ட் இருக்கா? இதைச் செய்யாவிட்டால் பணத்தை இழக்க நேரிடலாம்!
- IndiaGlitz, [Tuesday,August 10 2021]
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் முக்கிய சேமிப்புகளுள் ஒன்றாக இருப்பது வருங்கால வைப்பு திட்டம் (Provident Fund). இந்த வைப்புத் தொகையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. இந்த அமைச்சகம் வெளியிட்டு உள்ள புதிய அறிக்கையில் பிஃஎப் கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தெரிவித்து இருக்கிறது.
ஒரு நபர் பணியில் இருக்கும்போது அவருடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகை பிடித்து வைக்கப்படும். கூடவே வேலைக்கொடுக்கும் நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட பணத்தை சேர்த்து இந்த பிஃஎப் அக்கவுண்டிற்கு செலுத்துவது வழக்கம். இந்தப் பணம் ஒருவருடைய ஓய்வின்போதும் அல்லது அவசரக் காலத்திலும் பெரும் உதவியாக இருக்கிறது.
இந்த பிஃஎப் அக்கவுண்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை கடந்த ஜுன் 1 ஆம் தேதிவரை காலஅவகாசம் கொடுத்து இருந்தது. ஆனால் இன்னும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள் இந்த ஆதார் எண்ணை பிஃஎப் அக்கவுண்டுடன் இணைக்காமல் இருக்கின்றனர்.
எனவே பிஃஎப் அக்கவுண்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய தொழலாளர் நலத்துறை அமைச்சகம் வரும் செப்டம்பர் 1, 2021 வரை காலஅவகாசம் கொடுத்திருக்கிறது.
இந்த நாளுக்குள் உங்களுடைய ஆதார் எண்ணை பிஃஎப் அக்கவுண்டுடன் இணைக்காமல் விட்டுவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உங்களுடைய பிஃஎப் அக்கவுண்டுக்கு பணத்தை செலுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே உங்கள் பிஃஎப் அக்கவுண்டுக்கு உங்களுடைய நிறுவனம் பணத்தை செலுத்துவதற்கு ஏதுவாக உங்களுடைய ஆதார் எண்ணை பிஃஎப் அக்கவுண்டோடு இணைத்துவிடுங்கள்.
ஒருவேளை ஏற்கனவே உங்கள் பிஃஎப் அக்கவுண்டோடு ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தாலும் அதை இன்னொரு முறை சரிப்பார்த்துக் கொள்வதும் நலம்.
பிஃஎப் கணக்குடன் ஆதார் இணைக்கும் முறை-
www.epfindia.gov.in என்ற சேவை இணையத்தளத்தைப் பயன்படுத்தி பிஃஎப் உடன் ஆதார் எண்ணை எளிதாக நீங்கண் இருந்த இடத்தில் இருந்தே இணைத்துவிடலாம்.
மேற்குறிப்பிட்ட இணையப் பக்கத்தில் e-KYC எனப்படும் போர்ட்டலை கிளிக் செய்து அதில் உங்களுடைய பிஃஎப் UAN எண்ணை பதிவிட வேண்டும்.
பிஃஎப் UAN எண்ணுடன் முதலில் உங்களுடைய மொபைல் எண்ணையும் நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இப்படி செய்யும்போது உங்களுடைய செல்போனிற்கு ஒரு OTP வரும்.
இந்த OTP எண்ணை வைத்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். பிறகு அதனை வெரிபை செய்ய OTP எண் வரும். மேலும் உங்கள் பிஃஎப் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்டதற்கான இமெயில் லிங்க் உங்களுடை மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். இந்த இமெயில் ஐடியை க்ளிக் செய்து உங்கள் பிஃஎப் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள்.