பழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு ’உங்கள் தீர்ப்பு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான டிடி அதன்பின் சன் டிவியிலும் பின்னர் விஜய் டிவியிலும் பல வருடங்களாக தொகுப்பாளினியாக உள்ளார். ’காபி வித் டிடி’ ’ஜோடி நம்பர் 1’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு என ஒரு ரசிகர்கள் தொலைக்காட்சி வட்டாரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் டிடி ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்த டிடி, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆக்கபூர்வமான பதில் கொடுத்துள்ளார். உங்களுடைய பழைய வாழ்க்கை உங்களது தற்போதைய மகிழ்ச்சியினை பாதிக்கின்றதா? அதை நீங்க எப்படி கையாளுகிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டிடி கூறியதாவது:
அப்படி எதுவும் எனக்கு கிடையாது. ஒரு தடவை முடிந்துவிட்டால் முடிந்துவிட்டது தான். அதை என்றும் திரும்பி பார்க்கக் கூடாது. அதில் கிடைக்கும் பாடத்தை மட்டும் நாம் கற்றுக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டிய தான். அடுத்து என்ன வாழ்க்கையில் என்பதை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். சும்மா பழசை நினைத்து கொண்டு அழுது கொண்டு இருப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை’ என்று பதிலளித்துள்ளார். டிடியின் இந்த வேற லெவல் பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Such a sweetheart ♥️♥️ Amazing answer from DD about dealing with the past!! ??♥️ Love you so much akkaaa♥️♥️?? @DhivyaDharshini pic.twitter.com/i3fEjF7qBK
— Anbu (@Mysteri13472103) May 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments