ரொம்ப வருத்தமா இருக்கு: அஜித் செல்பி விவகாரம் குறித்து டிடி பதிவு செய்த டுவிட்!

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற மனைவி ஷாலினியுடன் வந்த அஜித்தை ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு பார்க்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர் என்பதும், ஒரு கட்டத்தில் தனது அருகே செல்பி எடுத்துக் கொண்ட ரசிகர் ஒருவரின் மொபைல் போனை பிடுங்கிய அஜித் அதன் பின் சில நிமிடங்கள் கழித்து அந்த ரசிகரை அழைத்து அறிவுரை கூறி செல்போனை திருப்பிக் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே.

இதுகுறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலை தளங்களில் தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஜய் டிவியின் டிடி என்கிற திவ்யதர்ஷினி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இன்று அஜித் சார் நடத்தப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது, அவர் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தார், அவர் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கும் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது, பதிலாக நாம் அவருக்கு அமைதியைக் கொடுக்க வேண்டாமா? அஜித் சார், நீங்க மிகவும் பொறுமையை கையண்டீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.