என்னால அழுகையை அடக்கவே முடியல… நெகிழ்ச்சியில் டிடி வெளியிட்ட பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்துவரும் திவ்யதர்ஷினி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை எனப் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய பதிவைப் பார்த்த ரசிகர்கள் மேலும் நெகிழ்ச்சியைப் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் 169 ஆவது படம் குறித்த தகவல்களை வீடியோவாக நேற்றிரவு சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அனிருத் இசையமைப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169 ஆவது படம் என்ற பீஜியத்துடன் அந்த வீடியோ அமைந்திருந்தது. இதைப்பார்த்த டிடி இயக்குநர் நெல்சனுக்கு தனது உற்சாகத்தையும் பாரட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்துவரும் நெல்சன் திலீப்குமார் இதற்கு முன்பு திரைக்கதை எழுத்தாளராக பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் உருவான பல ஹிட் ஷோக்களுக்கு இவர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் சிறந்த நண்பர்களாக டிடியும் நெல்சனும் ஒரே இடத்தில் வேலைப்பார்த்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுத்த நெல்சன் “கோலமாவு கோகிலா“, சமீபத்தில் “டாக்டர்“ அடுத்து தளபதி நடிப்பில் “பீஸ்ட்“ தற்போது சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்று அசுர வளர்ச்சியில் இருந்துவருகிறார். இந்நிலையில் டிடி வெரி ஹேப்பி என்று இயக்குநர் நெல்சனுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்க்கும் தனது நன்றியைத் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Enala azhugaiya adakave mudiyalada nelsa… @Nelsondilpkumar
— DD Neelakandan (@DhivyaDharshini) February 10, 2022
THALAIVAR SINGAM MADRI IRUKAAARU DAAAAA.
EN THALAIVAAAAAAAAA @rajinikanth sir THANK YOU @sunpictures @anirudhofficial veriiiiii bgm
Pongapaaaaa Romba happy ❤️❤️❤️❤️ pic.twitter.com/cKkkDJOHYr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments