நயன்தாராவிடம் உள்ள பெஸ்ட் குணம்: டிடி வெளியிட்ட ரகசியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. சிறந்த நடிப்பையும் தாண்டி அவர் படக்குழுவினர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு, சக மனிதர்களிடம் காட்டும் அன்பு, உண்மையாக நட்பை நேசிப்பது ஆகியவையே அவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கான காரணம் என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நயன்தாராவின் பெஸ்ட் குணம் என்ற ஒன்றை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே கூறியுள்ளார். நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு யார் மீதாவது கோபம் என்றால் அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, ‘இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார். எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம் என்று நினைக்கிறேன். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசுவதைவிட யார் மீது கோபம் இருக்கிறதோ, அவர்கள் மீதே நேரடியாக காட்டி விடுவது மிகச் சிறந்தது என்று கூறியுள்ளார். டிடியின் இந்த பதிலால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்களின் படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
#Nayanthara #DD
— Unknown (@Mysteri13472103) May 15, 2020
DD about Nayanthara . . pic.twitter.com/D3YOvwmT9r
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com