'அந்த ஒன்றுக்கே டிக்கெட் காசு சரியாப்போச்சு': 'பீஸ்ட்' குறித்து டிடியின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வந்தாலும் முதல் நாள் வசூலில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய்யின் தீவிர ரசிகர்கள் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் தொலைக்காட்சி பிரபலமும் நடிகையுமான டிடி தனது சமூக வலைத்தளத்தில் ‘பீஸ்ட்’ குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அரபிக்குத்து ஒரு பாட்டுக்கே முழு காசும் சரியா போச்சு என்றும் விஜய் அவர்கள் சூப்பராக டான்ஸ் ஆடுவார் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்த படத்தில் அவர் மிகச் சிறப்பாக டான்ஸ் ஆடுகிறார் என்றும் இது முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கான படம் என்றும் நெல்சன் நீங்க உண்மையாகவே ரசித்து இந்த படத்தை எடுத்திருக்கிறீர்கள் என்று எல்லா காட்சியிலும் ஒரு ஹாலிவுட் ஸ்டார் மாதிரியே விஜய்யை ஒளிப்பதிவாளர் மனோஜ் காண்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அனிருத் நீங்க செமையாக இசை போட்டிருக்கிறீர்கள் என்றும் செல்வராகவன், பூஜா, விடிவி என அனைவரும் அற்புதமான நடித்து இருக்கிறார்கள் என்றும் அன்பறிவ் ஸ்டண்ட் உங்களை ஸ்டன் ஆக்கும் என்றும் நெல்சன் நீங்கள் எங்களை பெருமைப்படுத்தி உள்ளீர்கள் என்றும் பதிவு செய்துள்ளார். டிடியின் இந்த பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
Arabic kuthu oru song podhum full paisa vasool for Vijay sir fans #Beast sir dance supera aduvaru elarukum theriyum but still u can’t help but drop ur jaws and say “yennapa ivaru ipdi aduraru”nu.complete Vijay sir’s fans film & @Nelsondilpkumar ur truest fan rasichu yeduthiruke??
— DD Neelakandan (@DhivyaDharshini) April 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com