நீச்சல் உடை வீடியோவை போட ரொம்ப யோசிச்சேன்: டிடியின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

நீச்சல் உடையுடன் நீச்சல் குளத்தில் உள்ள வீடியோவை பதிவு செய்ய ரொம்ப யோசித்தேன் என்று பிரபல தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் டிடி என்கிற திவ்யதர்ஷினி சமீபத்தில் மாலத்தீவு சென்றார். அங்கிருந்து அவர் விதவிதமான அழகிய புகைப்படங்களை பதிவு செய்து கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பதிவு செய்தார்

இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நீச்சல் குள வீடியோவை போடுவதற்கு ரொம்ப யோசிச்சேன். நீச்சலுடையில் போஸ்ட் போட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? என்று எனக்கு ஒரே நினைப்பாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் நான் யோசித்துப் பார்க்கையில் இந்த இடத்தை நான் அடைவதற்கு 23 வருடங்கள் கடுமையாக உழைத்து இருக்கின்றேன். எனவே எனக்கு என்ன சந்தோசம் தேவையோ அதை செய்வதில் எந்தவித தயக்கமும் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். நான் விரும்புவதை நான் தைரியமாக செய்வேன் என்று கூறினார். பின்குறிப்பாக ’நீச்சல் வராது அதனால் நீச்சல் குளத்தில் வாக்கிங்’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது