புற்றுநோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது சமூக வலைப்பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தளபக்கத்தில் தனது டைரியில் உள்ள மலரும் நினைவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சமீபத்தில் தான் ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ கமல்ஹாசன் பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது குறித்து அவர் கூறியுள்ளார். டிடி சமீபத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு உதவி செய்வதற்காக சென்றதாகவும் அப்போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட் பெண்களை கட்டிப்பிடி வைத்தியம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னை கட்டிப்படித்த ஒரு பெண் பல வருடங்களுக்குப்பின் இந்த உணர்வை பெற்றதாக கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய டிடி, மேலும் சில பெண் நோயாளிகளை தான் கட்டிப்பிடித்ததாகவும், அவர்களுக்கு இது மிகப்பெரிய ஆறுதல் அளிப்பதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீங்கள் யாராவது கட்டிப்பிடித்து அவர் உங்களை பதிலுக்கு கட்டிப்பிடித்தால் நீங்கள் நிச்சயம் ஆசிர்வதிக்கப்பட்டவராக மாறுவீர்கள் என்றும் ஆனால் அதே சமயத்தில் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை தவறாக யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் டிடி அந்த பதிவில் கூறியுள்ளார்.
இருப்பினும் டிடி சொன்ன கட்டிப்பிடி வைத்தியம் நல்ல விஷயம் தான் என்றாலும் இன்றைய கொரோனா வைரஸ் காலத்தில் இந்த வைத்தியம் ஏற்றதல்ல என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments