டிவி புகழ் டிடிக்கு கிடைத்த 'ரொமாண்டிக்' புரமோஷன்!

  • IndiaGlitz, [Tuesday,March 26 2019]

தொலைக்காட்சிகளில் பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி ஏற்கனவே 'பவர்பாண்டி', 'சர்வம் தாளமயம்' 'துருவ நட்சத்திரம்' போன்ற படங்களில் சிறு கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் தற்போது நாயகியாக புரமோஷன் ஆகியுள்ளார்.

ஆம், தெலுங்கில் தயாராகி வரும் 'ரொமாண்டிக்' என்ற திரைப்படத்தில் டிடி தான் நாயகி. இந்த படத்தில் ஆகாஷ்பூரி நாயகனாகவும், நடிகை சார்மி முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.