கால்கட்டுடன் டிடியின் புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களை மகிழ்வித்த வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் சமூக வலைத்தளம் பக்கமே காணவில்லை. அவருடைய பழைய புகைப்படங்களை மட்டுமே சமூக வலைத்தளத்தில் பதிவுபட்டது
இந்த நிலையில் திடீரென தற்போது டிடி கால் எலும்பு முறிவுடன் கூடிய ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் டிடி பதிவு செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது இடது காலில் திடீரென எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பயஙகர வலியுடன் தான் இருந்ததாகவும், தற்போது ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் அவர் கூறியுள்ளார்
எலும்பு முறிவால் கிடைத்த ஓய்வு நேரத்தில் எழுதுதல் மற்றும் ஓடிடி பிளாட்பாரத்தில் படங்களைப் பார்த்தல் போன்றவைதான் தனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ள டிடி, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாகவும், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தற்போது தேவை என்பதால் இந்தத் தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் டிடி தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு தான் வழக்கம் போல் பணிகளை செய்ய திரும்பிவிடுவேன் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இந்த ஊரடங்கு நேரத்திலும் தனக்கு சிகிச்சை செய்து உதவி செய்து வரும் டாக்டர் ரனேஷ் அவர்களுக்கும் அவரைச் சேர்ந்த நான்கு பேருக்கும் தனது நன்றிகள் என்றும் டிடி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து டிடி விரைவில் குணமாக வேண்டும் என்றும், அவருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments