மோடியுடன், முன்னாள் முதல்வரை இணைத்து பேசிய தயாநிதி...! தொடர்ந்து திமுக-விற்கு கெட்ட பெயர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்டாலினை முதல்வராக்க விடாமல் தடுக்க, தயாநிதி மாறன் இப்படி செய்கிறார் என்ற செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், கிணத்துக்கிடவு தொகுதியில் திமுக சார்பாக களமிறங்கும், பிரபாகரனுக்கு ஆதரவாக தயாநிதி அழகிரி அவர்கள், குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
"இந்துக்களின் ஓட்டுக்களை பெற பாஜக தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றது. முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் இடையே உள்ள ஒற்றுமையை பாஜக-வால் பிரிக்க இயலாது. ஒரு காலத்தில் "குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை" ஆதரித்த அதிமுக, தற்போது ஆட்சிக்கு வந்தால் இதை எதிர்ப்போம் என கூறுகின்றது. முதலில் நாடாளுமன்றத்தில் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். இப்போது பொய் சொல்கிறார்கள். மத்திய அரசு ஏழை மக்களின் கனவை பறிக்கும் விதத்தில் நீட் தேர்வை கொண்டு வந்தது. இதனால் பறிபோனது 14 மாணவர்களின் உயிர் தான். இனி கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் நர்சிங்-ல் சேர்வதற்கு கூட தேர்வு உள்ளது என்கிறார்கள். இதனால் நம் மாநிலத்தின் உரிமையை காக்க மக்களாகிய நீங்கள் திமுக-விற்கே வாக்களிக்க வேண்டும். மேலும் பேசிய அவர் " அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடியை அப்பா என்றும், ஜெயலலிதாவை அம்மா என்றும் கூறுகிறார். இது எந்த விதமான உறவு. இதை நான் சொன்னால் என் மீது தவறு என்பார்கள்" என்று பிரச்சாரத்தில் கூறினார்.
இந்நிலையில் தயாநிதி பேசியதற்கு மக்கள் மத்தியில் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
தயாநிதி மாறன் பீ.டீம் அதனால்தான் ஸ்டாலினை முதல்வராக்காமல் தடுக்க இப்படி செய்து கொண்டிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments