மக்களவை வரை சென்ற ரஜினி-விஜய் விவகாரம்

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் கொண்டிருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினி மீது வருமான வரி தொடுத்த வழக்கு வாபஸ் பெற்றது, இன்னொன்று அதே வருமான வரித்துறை விஜய் வீட்டில் ரெய்டு செய்தது

இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக டிரெண்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி மற்றும் விஜய் விவகாரம் தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களை தாண்டி மக்களவையிலும் எதிரொலித்தது. இன்று திமுக எம்பி தயாநிதி மாறன் அவர்கள் மக்களவையில் இது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்

ரஜினிக்கு கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா? தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வருமானவரித்துறை வரிச்சலுகை அளித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் விஜய் வீட்டில் ரெய்டு செய்தது மட்டுமின்றி அவரை படப்பிடிப்பில் இருந்து கட்டாயப்படுத்தி வருமான வரித்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்’ என்று கூறினார்.

தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தை தயாரித்து வரும் கலாநிதி மாறனின் சகோதரர் தயாநிதிமாறன் ரஜினி குறித்து மக்களவையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது