தல அஜித்தின் 'மங்காத்தா' 10வது வருடம்: தயாரிப்பாளரின் நெகிழ்ச்சியான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜீத் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான நிலையில் சரியாக இந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் காமன் டிபி போஸ்டர்களை ரசிகர்கள் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘மங்காத்தா’ படம் குறித்த பதிவு செய்துள்ளார். தல அஜித்தின் உண்மையான கமர்சியல் சூப்பர் ஹிட் படம் ‘மங்காத்தா’ என்றும் இந்த படத்தின் பத்தாவது ஆண்டுவிழாவை கொண்டாடுவதில் பெருமை அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
ஸ்டைலிஷான மேக்கிங், யுவன் சங்கர் ராஜாவின் மேஜிக் பின்னணி இசை மற்றும் ஆக்சன் காட்சிகள், சேஸிங் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் ஆகியவையும், குறிப்பாக தல அஜித் அவர்களின் மாஸ் காட்சிகள் இன்னும் மனதில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்
நூறு படங்களில் ஒரு படம்தான் இவ்வாறு மிகச் சிறந்த படமாக அமையும் என்றும், இந்த படத்தின் ரிலீஸ் ஆனதில் இருந்து இன்று வரை இந்த படத்தின் ஒவ்வொரு அனுபவத்தையும் நான் நினைத்து பார்க்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சினிமா ரசிகர்களின் ஒவ்வொருவரின் விருப்பமான படங்களின் பட்டியலில் ‘மங்காத்தா’ படம் கண்டிப்பாக இருக்கும் என்றும் இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கின்றேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி தல அவர்களின் ரசிகனாக இந்த படத்தை ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
???????????? https://t.co/zFrpwPzHDw
— venkat prabhu (@vp_offl) August 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments