தல அஜித்தின் 'மங்காத்தா' 10வது வருடம்: தயாரிப்பாளரின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

தல அஜீத் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான நிலையில் சரியாக இந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் காமன் டிபி போஸ்டர்களை ரசிகர்கள் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘மங்காத்தா’ படம் குறித்த பதிவு செய்துள்ளார். தல அஜித்தின் உண்மையான கமர்சியல் சூப்பர் ஹிட் படம் ‘மங்காத்தா’ என்றும் இந்த படத்தின் பத்தாவது ஆண்டுவிழாவை கொண்டாடுவதில் பெருமை அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

ஸ்டைலிஷான மேக்கிங், யுவன் சங்கர் ராஜாவின் மேஜிக் பின்னணி இசை மற்றும் ஆக்சன் காட்சிகள், சேஸிங் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் ஆகியவையும், குறிப்பாக தல அஜித் அவர்களின் மாஸ் காட்சிகள் இன்னும் மனதில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்

நூறு படங்களில் ஒரு படம்தான் இவ்வாறு மிகச் சிறந்த படமாக அமையும் என்றும், இந்த படத்தின் ரிலீஸ் ஆனதில் இருந்து இன்று வரை இந்த படத்தின் ஒவ்வொரு அனுபவத்தையும் நான் நினைத்து பார்க்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சினிமா ரசிகர்களின் ஒவ்வொருவரின் விருப்பமான படங்களின் பட்டியலில் ‘மங்காத்தா’ படம் கண்டிப்பாக இருக்கும் என்றும் இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கின்றேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி தல அவர்களின் ரசிகனாக இந்த படத்தை ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி இதுவா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் தேதி குறித்த தகவல்

சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய மானஸி: உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட மானஸி பதிவு செய்துள்ள உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது 

நாளை பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பாக்சிங் கற்றுக்கொள்ளும் சூர்யா பட நடிகை… வெறித்தனமான பஞ்ச் வீடியோ வைரல்!

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “வாரணம் ஆயிரம்”

நட்சத்திரங்களுடன் யுவன் பர்த் டே பார்ட்டி....! சர்ப்ரைஸ் கொடுத்தது யார் தெரியுமா....?

இசை நாயகன், யுவன் ஷங்கர் ராஜா இன்று தன்னுடைய 42-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இவரின் பர்த்டே பார்ட்டியில்  நடிகர்கள் சிம்பு, தனுஷ், பாடகர்கள் தியா, அறிவு போன்றவர்கள்