ஜெயம் ரவியின் படத்தில் இணையும் 'செக்க சிவந்த வானம்' பட நடிகை!

  • IndiaGlitz, [Friday,August 30 2019]

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படமான 'ஜன கன மன' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டாப்சி மற்றும் ஈரான் நாட்டின் நடிகை ல்னாஸ் நோரோஸி ஆகியோர் நடித்து வருவதாக ஏற்கனவே பார்த்தோம். மேலும் முக்கிய கேரக்டர்களில் ஆக்சன்கிங் அர்ஜூன் மற்றும் கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜூ ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்த டயானா எரப்பா இணைந்துள்ளார். விரைவில் இவர் அஜர்பைஜான் நாட்டில் படக்குழுவினர்களுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'என்றென்றும் காதல்' அகமது இயக்கி வரும் இந்த படம் ஜெயம் ரவியின் 26வது படமாக உருவாகி வருகிறது. ஜெயம் ரவி ஏற்கனவே 'போகன்' இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.