மும்பை டிராபிக்கில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய டேவிட் வார்னர்… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் மும்பை போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஐபில் போட்டிகள் மூலமாக இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். மேலும் இவர் இந்திய சினிமா பாடல்களுக்கு அவ்வபோது நடனம் ஆடி ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக மும்பை வந்திருக்கும் டேவிட் வார்னர் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மும்பை சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபில் போட்டிகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் விளையாடிவரும் டேவிட் வார்னர் இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள வில்லை. அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளது. இதேபோல ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்குமான போட்டி வரும் ஜுன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19, 22 ஆம் தேதிகளில் முறையே மும்பை, விசாகபட்டிணம், சென்னையில் நடைபெறவுள்ளன. இதற்காக இந்தியா டேவிட் வார்னர் இந்தியா வந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார். இதற்கு மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை. இதனால் வலிமையான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வெற்றிக்கொள்ளுமா என ரசிகர்கள் ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments