ரன் அவுட் ஆக்க முயற்சித்த ஜடேஜா.. பேட்டை வாள்போல் சுழற்றி கிண்டல் செய்த வார்னர்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய போது டெல்லி கேப்டன் வார்னரை ஜடேஜா ரன் அவுட் ஆக்க முயற்சித்தபோது, ஜடேஜா ஸ்டைலில் வார்னர் பேட்டை வாள் போல் சுழற்றி காண்பித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டி நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 223 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் ,கான்வே ஆகியோர் அபாரமாக விளையாடினர். இதனை அடுத்து 224 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடிய நிலையில் இந்த போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் 5வது ஓவரில் வார்னர் ரன் எடுத்த போது மொயின் அலி அவரை ரன் அவுட் ஆக்க முயற்சித்தார். ஆனால் பந்து ஸ்டெம்பில் படவில்லை. அதனையடுத்து பந்தை கையில் வைத்திருந்த ரஹானே பந்தை எறிவது போல் சைகை செய்தார். ஒரு கட்டத்தில் அவரும் பந்தை ஸ்டெம்ப்பை நோக்கி எறிய, அதுவும் ஸ்டெம்பில் படவில்லை.
இதையடுத்து மீண்டும் வார்னர் அடுத்த ரன்னுக்கு ஓட முயற்சித்தபோது இப்போது பந்து ஜடேஜா கையில் இருந்தது. அப்போது ஜடேஜா பந்தை ஸ்டெம்ப்பை நோக்கி எறிய சைகை காட்டிய போது திடீரென வார்னர், ஜடேஜா ஸ்டைலில் பேட்டை வாள் போல் சுழற்றி காண்பித்ததும் ஜடேஜா சிரித்துக்கொண்டே பந்தை எரியாமல் இருந்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
#DavidWarner to #RavindraJadeja: உனக்கு மட்டும் தான் வாள் வித்தை தெரியுமா...எனக்கும் தெரியுமே 😅#GameOn #SoundOn #IPLOnStar #DCvsCSK #RaceToPlayoffs pic.twitter.com/bZaiet2GuE
— Star Sports Tamil (@StarSportsTamil) May 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com