'தேவர் மகன்' பாடலுக்கு மனைவி, குழந்தையுடன் நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கிடைத்த விடுமுறையில் வேலையின்றி வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான, நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் வீடியோக்கள் அவரது ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் கமலஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ’இஞ்சி இடுப்பழகி’ என்ற பாடலுக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணைய தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தமிழ் திரைப்பட பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் நடனமாடி இருப்பது தமிழ் திரைப்பட உலகிற்கு கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது.

More News

உதவித்தொகை வாங்க நேரில் வரவேண்டாம்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

சமீபத்தில் நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே.

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி: டாஸ்மாக் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா???

கொரோனா வைரஸ் பரவல் உலக மக்களை கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாஸ்மாக் கடைகளில் சமூக விலகலை பின்பற்ற வேண்டும்

தமிழகத்தில் புதிதாக கொரோனாவுக்கு 600 பேர் பாதிப்பு: 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று பாதிப்படைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்