யாக்கர் மன்னனைத் தமிழில் வாழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான்… வைரல் டிவிட்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நடராஜனுக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ கடும் வைரலாகி வருகிறது. முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் நடராஜன் ஐபிஎல் சன்ரைசர்ஸ் அணிக்காக கேப்டன் டேவிட் வார்னர் தலைமையின் கீழ் ஆடி கனவம் பெற்றார். அவர் ஐபிஎல் போட்டியில் வீசிய 71 யாக்கர்களும் பாராட்டும் விதமாக இருந்தது. இந்தப் போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன் மீது எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன.

அந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இவர் வலைப்பந்து வீச்சாளராக இடம்பெற்றார். பின்பு மூத்த வீரர்களின் காயம் காரணமாக இறுதி ஒருநாள் போட்டியில் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அடுத்து டி20 போட்டிகளிலும் இவர் பந்து வீச்சு பெரும் கவனம் பெற்றன. அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவரது பெயர் இடம்பெறுமா என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஒரு வரலாற்று சாதனைக்கு இவர் பக்க பலமாக இருந்தார். இதனால் நடராஜனுக்கு தொடர்ந்து பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் டேவிட் வார்னர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நட்டிக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி ஒரு வீடியோ பதிவிட்டு உள்ளார். அதில், “வாழ்த்துகள் நட்டு… வாழ்த்துகள் நட்டு… நீங்கள் ஒரு லெஜண்ட் உண்மையில் நீங்கள் பெரிய லெஜண்ட். இதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். களத்திற்கு உள்ளேயும் நீங்கள் மிகவும் சிறப்பான வீரர் அதை மீண்டும் நிரூபித்து உள்ளீர்கள் உங்களோடு ஆடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று நடராஜனை வார்னர் பாராட்டி உள்ளார்.

மேலும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு நான் கேப்டனாக இருந்துள்ளேன். நடராஜன் வியப்புக்குரிய வீரர், பணிவானவர். உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அவரது பந்து வீச்சு இருந்ததை பார்த்தோம். அதைத் தொடர்ந்து வலை பயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவிற்கு பயணித்தார். தனக்கு முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்கச் செல்லாமல் தியாகம் செய்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு மகத்தான சாதனை.

அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்ய வேண்டும். சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கடந்த முறை இறுதிகட்ட பந்துவீச்சில் நேர்த்தியாக செயல்பட்டார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது கடும் வைரலாகி வருகிறது.