கிரிக்கெட் கிரவுண்டில் கபடி ஆடிய டேவிட் வார்னர்… ரசிகர்களே வியக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் காபாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முன்னணி வீரர் டேவிட் வார்னர் செய்த ஒரு காரியம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
ஆஷஸ் தொடரின் முதல் நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பவுலிங் கைக்கொடுக்காது என நினைத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அவர் நினைத்தற்கு மாறாக ஆஸ்திரேலியா அணி பவுலிங்கில் வெளுத்து வாங்கியது. இதனால் இங்கிலாந்து முதல் நாளிலேயே 147 ரன்களுக்கு ஒட்டுமொத்த விக்கெட்டையும் இழந்தது.
அந்த வகையில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் 39 ரன்களையும் ஒல்லி போப் 35 ரன்களையும் அதிகப்பட்சமாக குவித்தனர். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார். இப்படி ஆட்டம் சூடுபிடித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபட்டது.
இதில் ஓபனராக இறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹரிஸ் வெறும் 3 ரன்களுக்கே நடையைக் கட்டினார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் வார்னர் பௌண்டரிகளை விளாசி அசத்தியபோது 32 ஆவது ஓவரில் ஒல்லி ராபின்சன் வீசிய பந்தில் அவருடைய பந்து எட்சாகியது. ஆனால் அந்தப் பந்தை இங்கிலாந்து வீரர் பேர்ன்ஸ் டைவ் அடித்து பிடிக்க முயன்றும் முடியாமல் போனது. இதனால் டேவிட் வார்னர் ஒருவழியாகத் தப்பித்தார்.
இப்படி இன்னொரு வாய்ப்பை பெற்ற டேவிட் ஆட்டத்தின் 37 ஆவது ஓவரில் மார்க் அவுட் வீசிய பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது பந்து ஷார்ட் லெக்கில் போய் இங்கிலாந்து வீரர் ஹமீத்திடம் சிக்கியது. அதேநேரத்தில் வார்னர் கிறீஸை விட்டு வெளியேறியதால் அவரை அவுட்டாக்க விரும்பிய ஹமீத் ஒருவழியாகத் தடுமாறி பந்தை ஸ்டம்பை நோக்கி வீசினார்.
ஆனால் அந்த பந்த் ஸ்டம்பில் படாமல் கூடவே ஹமித்தும் தடுமாறி கீழே விழுந்தார். இன்னொரு பக்கம் கிறீஸை நோக்கி திரும்பிய வார்னரும் கீழே விழுந்து ஒட்டுமொத்த கிரவுண்டும் ஸ்தம்பித்ததும். என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் குழம்பிய நிலையில் வார்னர் அவுட்டாகாமல் இருகக
கிறிஸை நோக்கி பேட்டை வீசியும் தனது கையை வைத்தும் தப்பித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதிலும் தமிழக ரசிகர்கள் டேவிட் வார்னரை பார்த்து கிரிக்கெட் கிரவுண்டிற்குள் கபடி ஆடுகிறீர்களா? எனக் கிண்டலடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விளையாடிய டேவிட் வார்னர் 94 ரன்களை விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களை குவித்துள்ளது.
A comedy of errors! ?? Warner survives #Ashes pic.twitter.com/zq6oxRxG0s
— cricket.com.au (@cricketcomau) December 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com