ஏகப்பட்ட மனைவிகள்: 10க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள்: ஒரு மாற்றுத்திறனாளியின் பகீர் வாக்குமூலம்!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

பார்வையில்லாத மாற்றுத் திறனாளி ஒருவர் பல பெண்களை திருமணம் செய்தும் பத்துக்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகளிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளதும் அவரது வாக்குமூலத்தின் தெரியவந்துள்ளதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்ற 38 வயது பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி நபர் அடிக்கடி பேருந்துகளில் செல்வார். பேருந்தில் தன்னுடைய பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர்களிடம் அன்பாக பேசி அவர்களிடம் செல்போன் நம்பர்களை வாங்கிக் கொள்வார். பின்னர் அவர்களுடன் அடிக்கடி இனிமையாக பேசுவதோடு அவர்களுடைய வீட்டுக்கே சென்று அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அந்த உதவிக்கு அவர் பணம் பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றார். இதுபோல சுமார் 50 பேர்களிடம் ரூபாய் 50 லட்சத்துக்கும் மேலாக மோசடி செய்திருப்பதாக தெரிகிறது

மேலும் மோசடி செய்த பணத்தை வைத்து பல பெண்களை திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகும் பல பெண்கள் தனக்கு கள்ளக்காதலிகளாக இருப்பதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் அசரப் அலி என்ற இன்ஜினியரிங் படித்த ஒரு பட்டதாரியை ஏமாற்றி பணம் பறித்த விஷயத்தில்தான் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசாரிடம் டேவிட் சிக்கிக்கொண்டார். மாற்றுத்திறனாளி ஒருவர் லட்சக்கணக்கில் மோசடி செய்து பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது

More News

'தர்பார்' வெற்றி பெற நூதன வேண்டுதல்களை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் படத்தை வரவேற்க காத்திருக்கின்றனர் 

விஜய்க்கு நான் தான் உதவி செய்தேன்: மைக் மோகன்

கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் ஆக இருந்தவர் நடிகர் மைக் மோகன்.

EMI கடன் வசதியினால் ஏற்படும் பாதிப்புகள்

தனிநபரிடம் கடன் வாங்கும்பொழுதோ அல்லது வங்கியில் கடன் வாங்கும் பொழுதோ அதன் வட்டி விகிதத்தை ஒரு முறைக்குப் பல முறை ஆலோசித்துச் செயல்படுகிறோம்.

மணிரத்னம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று

ஒரே டிக்கெட்டை கேன்சல் செய்த ஒன்பது பேர்...! தீபிகாவின் சபாக் படத்தை "மெர்சல்" ட்ரெண்ட் செய்யும் பாஜக.

ட்விட்டரில் #boycottchhapaak என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. பாஜக ஆதரவாளர்கள் தான் இந்த டிரெண்டிங்கை செய்து வருவதாக கூறப்படுகிறது.