போனின் தகாத உறவு....! மதுபோதை.....! கோவையில் குளவிக்கல்லால் கொலை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகள் பலரிடம் தகாத உறவு வைத்திருந்த காரணத்தால், தாயே தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில், கணுவாய்ப்பாளையம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் நாகமணி. 47 வயதுள்ள இவருக்கு கணவர் இறந்துவிட்ட நிலையில், நதியா(31) என்ற மகள் இருந்துள்ளார். தனது மகளை கடந்த 15 வருடங்களுக்கு முன்பே, புளியந்தோப்பு சோமையனூரை சார்ந்த சரவணகுமார் என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி(13), நிதீஷ் குமார்(12) என்ற குழந்தைகள் இருந்துள்ளனர். சென்ற 8 மாதங்களுக்கு முன்பே இவரது கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதன்பின் நதியா தனது தாய் வீட்டில், குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் குழந்தைகளை கவனிக்காமல், அடிக்கடி பலருடன் செல்போனில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
இதைக்கண்ட பாட்டியான நாகமணி குழந்தைகளை சரியாக கவனிக்காமல், யாருடன் போன் பேசுகிறாய் என கண்டித்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். ஆனால் இதைக்கண்டுகொள்ளாமல் நதியா பலருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நாகமணிக்கும், நதியாவிற்கும் குடிப்பழக்கம் இருந்ததால், இருவரும் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். ஒருநாள் தாயை, மகள் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த நாகமணி தனது அக்காவீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று வீடு திரும்பிய தாயும், மகளும் குடித்துவிட்டு மீண்டும் சண்டைபோட்டதாக கூறப்படுகிறது. மகளை கண்டித்துவிட்டு, இருவரும் படுத்து தூங்கியுள்ளனர். ஆனால் ஆத்திரம் அடங்காத நாகமணி தூங்கிக் கொண்டிருக்கும் மகளின் தலை மீது குளவிக்கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி ஜெய்சிங் விசாரணை செய்ய, போலீசார் நாகமணியை கைது செய்தனர். இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments