நரைமுடி இருந்தா என்ன? அப்படியே மணமேடை ஏறிய பிரபல நடிகரின் மகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் திலீப் ஜோஷியின் மகள் நியாதியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தின்போது மணமகள் நரைத்த முடியுடன் மேடையேறி இருக்கிறார். இவரது எளிமை மற்றும் வலிமையான செயலை நெட்டிசன்கள் தற்போது பாராட்டி வருகின்றனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் திலீப் ஜோஷி பல்வேறு இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய மகள் நியாதி தனது நீண்டகால காதலரான யசோவர்ந்தன் மிஸ்ராவை சமீபத்தில் கரம்பிடித்துள்ளார். மேலும் இந்த திருமணத்தின்போது நியாதி செய்த ஒரு காரியம்தான் தற்போது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது.
நடிகர் திலீப் ஜோஷி மகள் நியாதி தனது திருமணத்திற்காக மேக்கப் போட்டிருக்கிறார். ஆனால் ஏறக்குறைய முழுவதும் நரைத்திருக்கும் தனது தலைமுடியை கலர் செய்யாமல் விட்டு விட்டார். இந்த எளிமையை பார்த்துத்தான் தற்போது நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கும் ஒரு தைரிய வேண்டும் என நியாதியை பாராட்டி வருகின்றனர்.
மணப்பெண் என்றாலே நாள்கணக்கில் மேக்கப் போட்டுக்கொண்டு முடியை அலங்காரம் செய்துகொள்ளும் இந்த நவீன யுகத்தில் தன்னிடம் இருப்பதை மறைக்காமல் நியாதி செய்த காரியம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments