மாமியாருக்கு பாய்ஃபிரண்ட் வேணும்? வினோத விளம்பரத்தால் நெட்டிசன்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

51 வயதாகும் தனது மாமியாருக்கு பாய்ஃபிரண்ட் வேண்டும் எனக் கூறி நியூயார்க்கில் உள்ள மருமகள் ஒருவர் கொடுத்த விளம்பரம் தற்போது சோஷியல் மீடியாடிவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விளம்பரத்திற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு விண்ணப்பத்து வருகின்றனர்.

நியூயார்க் சிட்டியில் உள்ள ஹட்சனில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் 2 நாட்களுக்கு வெளியூர் செல்ல இருக்கிறாராம். இந்த நாட்களில் தனது மாமியார் தனியாக இருப்பாரே என நினைத்த அவர், மாமியாருக்குத் துணையாக யாராவது வேண்டுமே என யோசித்து இருக்கிறார். இதையடுத்து பிரபல விளம்பரத் தளமான கிரெய்க்ஸ்லிஸ்டில் எனும் இணையத் தளத்தில் 2 நாட்களுக்கு மட்டும் பாய்ஃபிரண்ட் வேண்டும் எனக்கூறி விளம்பரம் செய்திருக்கிறார்.

அந்த விளம்பரத்தில் ஒப்பந்த அடிப்படையில் 2 நாட்களுக்கு மட்டும் அந்த நபர் பாய்ஃபிரண்டாக இருக்க வேண்டும். இதற்காக அவருக்கு ரூ.1,000 டாலர்கள் செலவு செய்யப்படும் ( இந்திய மதிப்பில் இது ரூ.72,000) என்பதும் குறிப்பிடத்தக்கது. கூடவே அவருக்கு நன்றாக டான்ஸ் ஆடத் தெரிந்து இருக்க வேண்டும். கவரும் வகையில் பேச்சாற்றல் இருக்க வேண்டும். வயது 40-60 உள்ளவராக இருக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகளுடன் விளம்பரம் செய்திருக்கிறார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதென்ன அதிசயம் என வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் 2 நாட்களுக்கு பாய்ஃபிரண்டாக இருந்தால் 1000 டாலர்கள் கிடைக்குமே என நினைத்த பலரும் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.