கொரோனாவால் உயரிழந்த உடல்களை நாய் திண்ணும் அவலம்!!! பகீர் தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,August 11 2020]
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலாபாத் அடுத்த மவாலா பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு தற்காலிக இடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடுகாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் உடல்களை எரித்து விடுவதாகவும் அப்படி எரிக்கும்போது பாதி உடல் எரிந்தும் எரியாத நிலையில் உடல்களை நாய்கள் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகளுக்கு மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியமே காரணமாகக் கூறப்படுகிறது. உடல்களை எரிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் குறைந்த அளவிலான விறகுகளை மட்டுமே பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பொதுவாக ஒரு உடலை எரிப்பதற்கு 5 அல்லது 6 குவிண்டால் விறகு தேவைப்படும். ஆனால் அதிலாபாத்தின் மாநகராட்சி ஊழியர்கள் வெறுமனே 4 குவிண்டால் விறகுகளை பயன்படுத்தி கொரோனா உடல்களை எரிப்பதால் உடல்கள் சரியாக வேகாமல் நாய்கள் அவற்றை இழுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா நேயாளிகளுக்கு உயிரிழந்த பின்பும் சரியாக மரியாதை அளிக்கப்படுவதில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறத் தொடங்கியுள்ளனர். மவாலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடுகாட்டில் இதுவரை 7 ‘கொரேனா நோயாளிகள் எரிக்கப்பட்டதாகவும் அவர்களின் உடல்களை நாய்கள் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படும் நிலையில் தற்போது அதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.