கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான மாஸ் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Monday,October 17 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’தசரா’. நானி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’தசரா’ படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கீர்த்திசுரேஷ் வெண்ணலா என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படம் கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதை ஆகும்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.