பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்? தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியால் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,June 26 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஒரு சில திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்திகள் வெளியாகி வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா என்று தொலைக்காட்சி செய்திகளில் வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் பெங்களூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் தர்ஷன்-விஜயலட்சுமி தம்பதியினர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டில் கொரனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் விஜயலட்சுமிக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாகவும் கன்னட தொலைக்காட்சி சேனல்களில் செய்திகள் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல கன்னட நடிகர்கள் மற்றும் தர்ஷனின் ரசிகர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி கவலையுடன் கேள்வி எழுப்பி வந்த நிலையில் விஜயலட்சுமி இதற்கு பதில் அளித்துள்ளார். தன்னுடைய அப்பார்ட்மெண்டில் கொரோனா வைரஸ் சோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்தது உண்மைதான் என்றும் ஆனால் தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தான் தனது குடும்பத்துடன் நலமாக இருப்பதாகவும் தனக்கு கொரனோ வைரஸ் பாசிட்டிவ் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்தே தர்ஷனின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நடிகர் தர்ஷன் தற்போது ‘இன்ஸ்பெக்டர் விக்ரம்’, ‘ராபர்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், ஊரடங்கு முடிந்ததும் இந்த படங்களின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.