'கனா' நாயகனின் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,January 07 2019]

சமீபத்தில் வெளியான சிவகார்த்த்கேயனின் 'கனா' படத்தில் அறிமுகமான நடிகர் தர்ஷன் முதல் படத்திலேயே நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஹரிஷ்ராம் இயக்கவுள்ள குழந்தைகளுக்கான அட்வெண்ட்சர் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க தர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் கதையை கேட்டவுடன் தனக்கு பிடித்துவிட்டதாகவும், இதனால் இந்த படத்தில் நடித்து வருவதாகவும், முதல் படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் நகரத்து இளைஞன் கேரக்டரில் நடித்து வருவதாகவும் தர்ஷன் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைத்து வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு, இடுக்கி உள்பட கேரளாவின் காட்டுப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.