கிராமத்துக் கெட்டப்பில் தரிசனம் தந்த “குக் வித் கோமாளி” பிரபலம்… குவியும் லைக்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “குக் வித் கோமாளி” எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளைத் தவிர குக்குகளுக்கும் தற்போது திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் குக் வித் கோமாளி மூலம் வரவேற்பை பெற்ற தர்ஷா குப்தா “ருத்ரதாண்டவம்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தவிர சில புதிய வாய்ப்புகள் வந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தர்ஷா குப்தா தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு சாலை ஓரங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு அளித்து உதவி செய்துள்ளார். மேலும் சில அறக்கட்டளைகள் மூலம் இவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் தர்ஷா குப்தா தற்போது கிராமத்து கெட்டப்பில் போட்டோ ஷுட் எடுத்து அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அதிலும் விவசாயிகளைப் போற்றும் வகையில் கேப்ஷன் வைத்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments