இந்தியாவில் இனவெறுப்புடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் டேரன் சமி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்கு இந்திய தீவு, கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது இனவெறியுடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் இந்தியாவில் சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் வீரராக விளையாடியபோது இப்படி நடந்ததாகவும் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் இனவெறியுடன் தாக்கப்பட்டதால் இறந்துபோன ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கு விதமாக கருத்துப் பதிவு செய்த சமி தானும் இப்படியான இனவெறிக்கு ஆளாகியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கால்பந்தில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் இனவெறி காட்டப்படுகிறது என்று கடந்த வாரம் வெஸ்ட் இண்டிஸ் அணியின் வீரர் கிறிஸ் கெயில் குறிப்பிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது டேரன் சமியும் இதே போன்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், ஐசிசி போன்ற கிரிக்கெட் அமைப்புகள் இன்னும் எவ்வளவு நாள் அமைதியாக இருக்கும்? இந்தச் சமயத்தில் இனவெறி பற்றிய கருத்துகளை விவாதிக்காவிட்டால் பின்பு ஒருபோதும் இதற்கான தீர்வுகளை காணமுடியாது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் போட்டிகளின்போது தன்னையும் இலங்கை வீரர் பெரோராவையும் Kalu என்றுதான் அழைப்பார்கள். அதற்கு பொலிக்குதிரை என்றும் அர்த்தம் கூறினார்கள். நான் அந்தத் தருணங்களில் வலிமையான கறுப்பு வீரன் என்றே புரிந்துக் கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது Kalu என்றால் கறுப்பன் என்று. தெரிந்தவுடன் நான் மிகவும் கோபப்பட்டேன். இதுபோன்ற தருணங்கள் எனது வாழ்க்கையில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இனவெறி என்று உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அது விளையாட்டிலும் பல நேரங்களிலும் பிரதிபலிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்ற கருத்தையும் டேரன் சமி தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments