ரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு முடிவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வசன காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் மூன்றாம் வாரத்துடன் முடிவடையவுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள இயக்குனர் முருகதாஸ், 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் வரை நடைபெறும் என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக படக்குழுவினர் சுவிட்சர்லாந்து செல்லவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகாவின் தயாரிப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
Director @ARMurugadoss replied to our Twitter handle that the shooting of #Darbar will only be completed by August. Earlier Chithra Lakshmanan reported on his YouTube channel (Touring Talkies) that Darbar would be completed even before 3rd June week. Get ready for PONGAL 2020! pic.twitter.com/qMR2rEVzfr
— Rajinikanth Fans (@RajiniFC) June 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments